போச்சம்பள்ளியில் இயங்கி வரும் தொழிலாளர் அரசு ஈட்டுஉறுதி மருத்துவமனையில் இன்று பணிபுரிந்த மருத்துவருக்கும் செவிலியர்களுக்கும் குவியும் பாராட்டுகள்!!!! - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 22 November 2023

போச்சம்பள்ளியில் இயங்கி வரும் தொழிலாளர் அரசு ஈட்டுஉறுதி மருத்துவமனையில் இன்று பணிபுரிந்த மருத்துவருக்கும் செவிலியர்களுக்கும் குவியும் பாராட்டுகள்!!!!


கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டத்தில் இயங்கி வரும் பிரபல தனியார் தொழிற்சாலையான ஷூ கம்பெனி இதில் பணி புரியும் பெண்களுக்கு என்று தொழிலாளர் அரசு ஈட்டுருதி மருத்துவமனை போச்சம்பள்ளியில் அமைந்துள்ளது.


இந்த மருத்துவமனையில் நாளொன்றிற்கு சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்கள் பரிசோதனைக்காக இந்த மருத்துவமனையை நாடுவது வழக்கம் இன்று பரிசோதனைக்காக வந்த பெண்களிடம் பணியில் இருந்த பணிமருத்துவர் திருமதி. உமா மகேஸ்வரி அவர்களும் இன்று பணிபுரிந்த செவிலியர்களும் தொழிற்சாலையில் பணிபுரியும்  பெண்கள்களும் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பரிசோதனைக்காக வந்திருந்த காரணத்தினால் மதிய உணவிற்கு கூட செல்லாமல் தங்களது மருத்துவ பணியை திறமையாகவும் செம்மையாகவும் செய்து வந்தனர். 


மருத்துவரை நாடி வந்த நிலையில் மருத்துவரின் கனிவான பார்வையில் முறையான ஆலோசனை வழங்கி முறையான சிகிச்சை கொடுத்து அனைத்து பெண்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கி மருத்துவ ஆலோசனை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது, இதனால் இதில் இன்று பரிசோதனைக்காக வந்த பெண்களும் மற்றும் தொழிற்சாலையில் பணியில் இருக்கும் பெண்களும் பாராட்டினார்கள்.


கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர்

எஸ்.சத்தியநாராயணன்

No comments:

Post a Comment

Post Top Ad