தொடர்ந்து திருடு போகும் மாடுகள்; கண்டுகொள்ளாத மத்தூர் காவல்துறை. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 28 November 2023

தொடர்ந்து திருடு போகும் மாடுகள்; கண்டுகொள்ளாத மத்தூர் காவல்துறை.


கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் அந்தேரிப்பட்டி ஊராட்சி இக்கிராமத்தில் இரண்டு மாதத்திற்கு முன்பு சுமார் 2 லட்சம் மதிப்புள்ள மாடுகள் திருடு போனதாக தகவல் தெரிவித்தும் மத்தூர் காவல்துறை கண்டு கொள்ளவில்லை, மீண்டும் இதே பகுதியில் இரண்டு மாடுகள் திருடு போனதாக உரிமையாளர்கள் தகவல் தெரிவித்தும் மத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இவர்களுக்கு என்று புகார் அளித்ததற்கான எந்த ஒரு ரசீதும் கொடுக்கவில்லை என அந்த விவசாயி  தெரிவித்தார்.

என்ன காரணத்திற்காக ஏற்கனவே கொடுக்கப்பட்ட புகார் மற்றும் தற்போது கொடுக்கப்பட்ட புகார்மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர், மேலும் காவல்துறை உங்கள் நண்பன் என்று கூறும் இந்த தமிழ்நாட்டில் மத்தூர் காவல் நிலையத்தில் மட்டும் ஏன் ரசீது (CSR) கொடுக்க மறுப்பதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள், மத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது மத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் அவர்களிடம் புகார் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தும் கண்டுகொள்ளாதது ஏன்? என்பதும் புகார் தெரிவித்த நபர்களை ஒரு தலை பட்சமாக மிரட்டுவதும் மிகவும் வருத்தத்திற்குரிய செயலாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கேள்வியாக உள்ளது.


இதுகுறித்து உடனடியாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அந்தேரிப்பட்டி ஊராட்சியை ஆய்வு மேற்கொண்டு திருடு போன மாடுகள் மற்றும் பொருட்களை மீட்க பாதிக்கப்பட்ட நபர்களிடம் முறையான விசாரணையாவது மேற்கொள்வாரா என்பதே அனைவருடைய இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad