மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி செய்தவர்களுக்கு கூலிபணம் வராமல் காத்திருக்கும் கிராம மக்கள். - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 4 November 2023

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி செய்தவர்களுக்கு கூலிபணம் வராமல் காத்திருக்கும் கிராம மக்கள்.


கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் அந்தேரிப்பட்டி ஊராட்சி  கிராம பகுதியில்  இருக்கும் மக்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ்  பணி செய்தவர்களுக்கு நான்கு மாத காலமாக பணம்  வரவில்லை என்று பெண்கள் புலம்பி வருகிறார்கள்.


தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு கூடபணம் இல்லாமல் காத்திருக்கும்  மாற்றுத்திறனாளர்கள்  மற்றும் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரிந்த பெண்கள் மற்றும் ஆண்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் நிலைமை உள்ளது இதை உடனடியாக மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி செய்தவர்களுக்கு  முழு கூலி பணத்தை வழங்க வேண்டும் மற்றும் அவர்களுக்கு 100 நாள் வேலை தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் பார்து வருகிறார்கள் நிறைவேற்றப்படுமா மாவட்ட நிர்வாகம்???


- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ் சத்தியநாராயணன் .

No comments:

Post a Comment

Post Top Ad