அதியமான் மகளிர் கல்லூரி மாணவிகள் ஹாக்கத்தான் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 3 November 2023

அதியமான் மகளிர் கல்லூரி மாணவிகள் ஹாக்கத்தான் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அமைந்துள்ள அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைப்பின் மூலம், வேதியியல் துறை இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவிகள் செ. ஷீபா, க. கவிப்பிரியா மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவி க. சுஷ்மிதா ஆகியோர் கொண்ட குழு, மாநில அளவிலான ஹாக்கத்தான் (புதுமையான கண்டுபிடிப்புகள்) போட்டியில் முதலிடத்தை பெற்று, தமிழ்நாடு அரசு வழங்கும் ஒரு லட்சம் ரூபாய் பரிசு தொகையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தமிழக அரசின் தன்னாட்சி அமைப்பான தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் கீழ் இயங்கி வரும் பெரியார் பல்கலைக்கழக தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் இளம் தொழில் முனைவோர்களை உருவாக்கவும், மாணவர்களின் கண்டுபிடிப்பு மூலம் மாநில அளவில் மூன்று கட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில் கோவை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளின் மாணவர்கள் பங்கேற்றனர். 


அதில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் பங்கேற்ற ஊத்தங்கரை அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல் இடத்தை பெற்றுள்ளது .இதுவே ஹாக்கத்தான் போட்டியில் முதல் முறையாக ஒரு கலை அறிவியல் கல்லூரி வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


சாதனை படைத்த மாணவிகள் கூறுகையில் இன்றைய காலகட்டத்தில் மரப் பொருட்களின் தேவை அதிகமாகி வருகிறது . இதனை கருத்தில் கொண்டு இதற்கு மாற்று தீர்வாக சுற்றுச்சூழலையும் மக்களையும் பாதிக்காத வகையில், எளிமையான பொருட்களை கொண்டு புதிய சாதனை படைத்துள்ளோம். இதற்கு வேதியியல் துறையை சார்ந்த பேராசிரியர் முனைவர் ச. கவிதா வழிகாட்டியாக இருந்து எங்களை ஊக்கமூட்டினார். தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், நடத்தப்பட்ட உயர்கல்வி மாணவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகள் 2023 கண்காட்சியில் நாங்கள் செய்த பொருட்கள் இடம் பெற்றது மகிழ்ச்சியாக இருந்தது. 


அது மட்டும் இல்லாமல் இந்த ஆண்டிற்கான சிறந்த புதுமைக்கான கண்டுபிடிப்புகள் 2023(ஹாக்கத்தான்}2023) பரிசுத் தொகையான ஒரு லட்சம் ரூபாயை குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ .அன்பரசன் அவர்களின் கையால் பெற்றது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. இதற்கு உறுதுணையாக இருந்த எங்கள் வழிகாட்டிக்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் என்றனர்.


இந்த சாதனை கல்லூரிக்கு வரும் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு ஒரு உந்துதலையும், ஊக்கத்தையும் அளிக்கும் வகையில் அமைந்தது, அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் முனைவர் சீனி. திருமால்முருகன், அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலர் முனைவர் ஷோபா திருமால்முருகன், தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் மா. அன்புச்செல்வி, பிற துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவிகள், பெரியார் பல்கலைக்கழக தொழில் முனைவோர் மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் பழனிவேலு, கள ஒருங்கிணைப்பாளர் முனைவர் அப்துல் காதர், அகமதாபாத்தைச் சேர்ந்த தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனர் மற்றும் திட்ட அலுவலர் ஜெயசங்கர், மற்றும் ஏகலை அகாடமி இயக்குனர் வீரமணி ஆகியோர் வெற்றி பெற்ற மாணவிகளைப் பாராட்டினர்.


- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ். சத்திய நாராயணன்

No comments:

Post a Comment

Post Top Ad