ஓசூரில் அடுத்தடுத்து வெடித்த ட்ரான்ஸ்பார்மர்கள் : 6 நாட்களாக மின்சாரம் ரத்து. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 19 March 2024

ஓசூரில் அடுத்தடுத்து வெடித்த ட்ரான்ஸ்பார்மர்கள் : 6 நாட்களாக மின்சாரம் ரத்து.


ஓசூரில் அடுத்தடுத்து வெடித்த ட்ரான்ஸ்பார்மர்கள் : 6 நாட்களாக மின்சாரம் ரத்து. கடைநிலை ஊழியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி அனைவரும் இரவு பகல் பார்க்காமல் தூக்கம் இல்லாமல் கடும் சிரமத்திற்கு இடையே பிரச்சனைகளை ஆராய்ந்து இன்று 7வது நாளாக அப்பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மரை பொருத்தினர். 

அதன் பின்னரே அனைத்து வீடுகளுக்கும் சீரான மின்சாரம் கிடைத்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் 6 நாட்களுக்கு பின்னர் இன்று 7 வது நாளில் மின்சாரம் கிடைத்ததால் நிம்மதி மற்றும் மகிழ்ச்சி அடைந்தனர். இருந்த போதிலும் அப்பகுதியை சேர்ந்த ஒரு சில பொதுமக்கள், மின்சார வாரிய ஊழியர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள் தெரிவதில்லை உயர் அதிகாரிகளின் ஆலோசனைகளின் பேரில்தான் தற்போது மின்சாரம் கிடைத்துள்ளது. 


எனவே மின்சார வாரிய துறையினருக்கு புத்தாக்க பயிற்சி அளிக்க வேண்டும் என கேட்டு கொண்டனர். அங்கு வாழும் மற்றொரு தரப்பு மக்களோ, நீண்ட நாளுக்கு பின் 7 வது நாளில் மின்சாரம் கிடைத்ததால் பெரும் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தனர். மின்சார வாரியத்தினர் இரவு பகல் பார்க்காமல், உயிரை பணயம் வைத்து, பலமுறை மின்சார கம்பங்களில் ஏறி இறங்கி ஒவ்வொரு வீடுகளிலும் மின்சார ஒயர்களை சோதனை செய்து எங்கு பிரச்சனை உள்ளது என ஆராய்ந்து அதன் பின்னரே தற்போது புதிய டிரான்ஸ்பார்மரை அமைத்து மின்சாரத்தை கொடுத்துள்ளனர். 


எனவே மின்சார வாரிய உயர் அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை தங்கள் பகுதியில் வேலை செய்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்வதாக கூறினர். 

No comments:

Post a Comment

Post Top Ad