ஓசூர் மாநகரில் அமையவிருக்கும் பிரமாண்ட "வள்ளலார் அருளகம்" சபை. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 21 March 2024

ஓசூர் மாநகரில் அமையவிருக்கும் பிரமாண்ட "வள்ளலார் அருளகம்" சபை.


ஓசூரில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர், தொலைவில் அமைந்துள்ள நெல்லூர் எனும் கிராமத்தில், வள்ளலாரின் விவேகம் அறக்கட்டளைக்கு சொந்தமாக 12 ஏக்கர் நிலம் உள்ளது. 12 ஏக்கர் நிலத்தில், முதற்கட்டமாக 5 ஏக்கர் நிலத்தில் "வள்ளலாரின் அருளகம்" என்ற பெயரில் மிக பிரம்மாண்ட கட்டிடம் அடுத்த  ஆண்டில் அடிக்கல் நாட்டப்படும்.

வள்ளலாரின் அருளகம் கட்டிடத்தின் சிறப்பம்சம். 

நுழைவு பகுதியில்  நடராஜர் சிலை, சன்மார்க்க சபையில் அரிய வகை கல்லில் செதுக்கபட்ட வள்ளலார் சிலை, ஜோதி தரிசனம் - வழிபாடு மையம், தியான மண்டபம், தர்மச்சாலை, வள்ளலாரின் விவேகம் மண்டபம், வள்ளலாரின் விவேகம் அலுவலகம் மற்றும் 7 ஏக்கர் பரப்பில் வள்ளலார் பூங்கா, மூலிகை மரங்கள், நீர்வீழ்ச்சி ஆகியவை அமைப்படும். 


வள்ளலாரின் விவேகம் அறக்கட்டளை சார்பில் கட்டப்படும் இந்த வள்ளலாரின் அருளகம், இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு நிறுவன ஆலோசனைப்படியே வள்ளலாரின் அருளகம் சபை அமைக்கப்படும். மேலும் Indian Institute Of Technology–Madras. பேராசிரியர்கள் மற்றும் இந்தியாவின் பாரம்பரியமான கட்டிடகக்கலைஞர்களால் உட்புற வடிவமைப்பு "வள்ளலாரின் அருளகம்" அமைக்கபடும். 


இந்த கட்டிடத்தின் வேலைப்பாடு வரும் 2028- ஆம் ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது, 2029ஆம் ஆண்டு வள்ளலாரின் விவேகம் அறக்கட்டளையின் சார்பில் கட்டப்படும்  வள்ளலாரின்  அருளகம் மிக மிக பிரம்மாண்டமான முறையில் குடமுழுக்கு விழா நடைபெறும் என அதன் பொறுப்பாளர் சுரேந்திரன் அவர்கள் தெரிவித்தார். மேலும் இந்த கட்டிடம் தமிழர்களின் அழிந்த பாரம்பரியத்தை நினைவூட்டும் வகையில், எண்க்கோண வடிவில், வள்ளலாரின் அருளகம் சபை அமைக்கபடுவதாக அவர் தெரிவித்தார்.  

No comments:

Post a Comment

Post Top Ad