கிருஷ்ணகிரி அருகே திமுக பிரமுகர் வெட்டி கொலை ! 3 பேர் கைது ...! - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 3 April 2024

கிருஷ்ணகிரி அருகே திமுக பிரமுகர் வெட்டி கொலை ! 3 பேர் கைது ...!


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த பேரிகை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சூலகுண்டா என்னுமிடத்தில் திமுக பிரமுகர் கார்த்திக் என்பவரை கடந்த மார்ச் மாதம் 15தேதி அன்று மாலை 4 மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி சென்றனர்.

இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய கர்நாடக மாநிலம் அனிகிரிபள்ளியை சேர்ந்த கார்த்திக் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் நீண்ட நாட்களாக சொத்து பிரச்சினை காரணமாக  திமுக பிரமுகரை கொலை செய்தது ஒப்புக்கொண்டார்.


பின்னர் இந்த கொலையில் தொடர்புடைய நபர்களை பேரிகை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், ஏப்ரல் 3 தேதி அன்று மாலை 4 மணியளவில் கர்நாடக பகுதியை சேர்ந்த கனகராஜ், முருகேசன், பாலகிருஷ்ணன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து ஓசூர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad