கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானையால் மக்கள் அச்சம்! - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 12 March 2024

கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானையால் மக்கள் அச்சம்!


கிராமத்துக்குள் நுழைந்து பலா மரத்தில் தொங்கிய பலாப்பழத்தை பறித்து சாப்பிட்ட காட்டு யானை கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள மணியம்பாடி கிராமத்தில் பலா மரங்கள் அதிக அளவில் உள்ளன. அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் பலா பழங்களை பறித்து சாப்பிட்டு செல்வதும் விவசாயிகள் பயிரிட்டுள்ள ராகி, பீன்ஸ், முட்டைகோஸ், தக்காளி உள்ளிட்ட விளை பயிர்களை சேதப்படுத்தி செல்வதும் வாடிக்கையாக உள்ளது. 

அந்த வகையில் வனப்பகுதியில் இருந்து இரவு நேரத்தில் வெளியேறும் ஒற்றை காட்டு யானை மணியம்பாடி கிராமத்தில் தொடர்ந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள விளை பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கிராமத்துக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கிருந்த பலாமரத்தில் பழுத்து தொங்கிய பலா பழங்களை சாப்பிட சென்றுள்ளது. இதனால் கிராம மக்கள் கடும் அச்சம் அடைந்தனர். ஒரு கட்டத்தில் அந்த பலா மரத்திலிருந்து பலா பழத்தை காட்டு யானை லாவகமாக பறித்து சாப்பிட்டது. இந்த காட்சிகளை அங்கு நின்ற பொதுமக்கள் டார்ச் லைட் அடித்து தங்களது செல்போன்களில் படம் பிடித்துள்ளனர். 


இந்த ஒற்றை காட்டு யானை தொடர்ந்து அந்த பகுதியில் சுற்றித்திரிந்து விளை பயிர்களை சேதப்படுத்தி கிராம பொது மக்களை அச்சுறுத்தி வருவதால் அதனை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad