அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்!. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 12 March 2024

அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்!.


தமிழகத்தில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் டி எம் தமிழ் செல்வம் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசின் மெத்தனப் போக்கினால் பள்ளி மாணவர்கள் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி வாழ்க்கை சீரழித்து வருவதாக கூறி நான்கு முனை சந்திப்பிலிருந்து கல்லாவி பிரிவு சாலை வரை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. 

முன்னதாக மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் தொடர்ந்து அதிமுகவினர் பல்வேறு கண்டன கோஷங்களை எழுதிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்று மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டனர் இதில் ஊத்தங்கரை ஒன்றிய செயலாளர்கள் வேடி, வேங்கன், நகர செயலாளர் ஆறுமுகம், மாவட்ட துணை செயலாளர் சாகுல் ஹமீது, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் இளையராஜா உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad