சூளகிரி அருகே பயிரிடப்பட்ட புதினாவை இயந்திரம் கொண்டு அழித்து வரும் விவசாயிகள்!. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 11 March 2024

சூளகிரி அருகே பயிரிடப்பட்ட புதினாவை இயந்திரம் கொண்டு அழித்து வரும் விவசாயிகள்!.

*சூளகிரியில் இயந்திரம் கொண்டு புதினா சாகுபடியை அழித்து வரும் விவசாயிகள்.*
*விளைச்சல் அதிகரிப்பு காரணமாக தினசரி சந்தையில் விலை சரிவு* 


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் விவசாய நிலத்தில் புதினா , கொத்தமல்லி, தக்காளி, முட்டைகோஸ் உள்ளிட்டவை பயிரிடப்படுகிறது.


அறுவடை செய்யப்படும் காய்கறிகள், மற்றும் கீரைகள் ஆந்திரா , கர்நாடகா, மற்றும் இதர மாவட்டளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

இந்தநிலையில் சூளகிரி வட்டார பகுதிகளில் அதிகளவில் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்ட புதினா , வரத்து அதிகரிப்பு காரணமாக தினசரி சந்தையில் விலை கடும் சரிவு அடைந்ததாக வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு  புதினா அறுவடையில் நல்ல இலாபம் அடைந்த விவசாயிகள், தற்போது புதினா வரத்து அதிகரிப்பால் விலை கடும் சரிவு அடைந்ததாக விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்...

இதனால் விவசாயத்தில் பெரிதும் இலாபம் கிடைக்காத நிலையில் விவசாயிகள் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த புதினா விவசாய நிலத்திலே விட்டு வைத்தும்  கால்நடைகளுக்கு உணவாக்கப்பட்டும் , மேலும் இயந்திரங்கள் கொண்டு புதினாவை அழித்து வருகின்றனர்.
சூளகிரியை அடுத்த ஆத்துமேடு என்னும் பகுதியில் நாகராஜ் என்பவரக்கு சொந்தமான புதினாவை இயந்திரம் கொண்டு அழித்து வரும் விவசாயி.சூளகிரியில் உள்ள தினசரி கீரைகள் சந்தையில் 100 கட்டுகள் அடங்கிய புதினா மூட்டையில் விலை 2000 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது அதே மூட்டையில் விலை 150 ரூபாய் விற்ப்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு புதினா கட்டின் விலை 20 முதல் 40 வரை விற்ப்பணையான நிலையில் தற்போது அதே கட்டின் விலை 2, 3 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது 

தொடர்ந்து சூளகிரி வட்டார பகுதிகளில் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்ட புதினா கடும் விலை சரிவு காரணமாக அறுவடை செய்யலாம் விவசாய நிலத்திலே விட்டு வைத்து இது போன்ற கால்நடைகளுக்கு தீவனமானக்கப்பட்ட சம்பவம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்த நிலையில் விவசாயத்தில் கடும் நஷ்டம் ஏற்ப்பட்டதாகவும் இதற்கு உரிய இழப்பீடு அரசு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad