சூளகிரி சேர்மன் அலுவலகத்தில் உலக மகளீர் தின விழா! - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 9 March 2024

சூளகிரி சேர்மன் அலுவலகத்தில் உலக மகளீர் தின விழா!

மார்ச் 2024 உலக மகளிர் தினத்தையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி தொகுதி சூளகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சூளகிரி ஒன்றிய குழு தலைவர் திருமதி. லாவண்யா ஹேம்நாத் அவர்கள் தலைமையில் உலக மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 


அனைத்து பெண் ஊழியர்களை வைத்து ஒன்றிய குழு தலைவி கேக் வெட்டி கொண்டாடப்பட்டன முக்கிய நிகழ்வாக இம்மிடிநாயக்கனப்பள்ளி ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகியோர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர் .


இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்லகன்ணாள், (வ.ஊ) வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.முருகன், (கி.ஊ) மற்றும் உதவி பொறியாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad