சூளகிரி அருகே பணியின் போது கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த நபர் பலி! - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 9 March 2024

சூளகிரி அருகே பணியின் போது கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த நபர் பலி!


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த அனாசந்திரம் கிராமத்தில் சுணில் என்ற நபர் கட்டிடத்தின் மேல் அமர்ந்து பணி செய்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கிழே விழுந்ததில் அந்த நபருக்கு தலை , முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.


உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் கிழே விழுந்து படுகாயம் அடைந்த நபரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சூளகிரியில் உள்ள 24 மணிநேர இலவச அவசர சிகிச்சை மையத்தில் அனுமத்தித்தனர். சிகிச்சை பலனின்றி அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் உடலை மீட்ட போலீசார் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சூளகிரி போலிசார் மார்ச் 9 தேதி அன்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

No comments:

Post a Comment

Post Top Ad