கிருஷ்ணகிரி அருகே குழந்தைகள் கடத்தல் குறித்து வாட்ஸ்அப் மூலம் பரப்பிய நபரை போலிசார் கைது செய்தனர். - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 9 March 2024

கிருஷ்ணகிரி அருகே குழந்தைகள் கடத்தல் குறித்து வாட்ஸ்அப் மூலம் பரப்பிய நபரை போலிசார் கைது செய்தனர்.

சூளகிரியை அடுத்த நாயக்கனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த நபர் குழந்தைகள் கடத்தல் குறித்து தவறான தகவல் வாட்ஸ் அப் மூலம் பரப்பியதால் அந்த நபரை போலீசார் கைது செய்தனர்


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த உத்தனப்பள்ளி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட நாயக்கனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் வாட்ஸ் அப் குழுவில் குழந்தைகள் கடத்தல் குறித்து வதந்திகளை பரப்பியதால் அந்த நபரை உத்தனப்பள்ளி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கிருஷ்ணகிரி அருகே செம்படமுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 3 வடமாநில இளைஞர்கள் சுற்றித்திரிந்துள்ளனர். அப்போது செம்படமுத்தூரில் இருந்து எண்ணேகொள் நோக்கி சென்ற பெண்ணிடம் இருந்து குழந்தையை பறிக்க முயன்றதாக கூறி அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் 3 இளைஞர்களை கடுமையாக தாக்கினர். அவர்கள் வந்த ஆட்டோவையும் அடித்து உடைத்தனர். இளைஞர்கள் தாக்கும் காட்சிகள் சமூகவலைதளத்தில் பரவியது.


இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை அவர்கள் விசாரணை நடத்தியதில் இது வெறும் வதந்திகள் மட்டுமே, அப்படி யாரும் குழந்தைகள் கடத்தவில்லை என போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் குழந்தைகள் கடத்தல் குறித்து வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரப்புவோர் மீது காவல் துறை சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை அவர்கள் தெரிவித்திருந்த நிலையில் உத்தனப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாயக்கனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவரை மார்ச் 9 தேதி அன்று மாலை 6 மணியளவில் கைது செய்து ஓசூர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad