வேப்பனபள்ளி அருகே உரிய ஆவணமின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 4 இலட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல். - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 9 April 2024

வேப்பனபள்ளி அருகே உரிய ஆவணமின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 4 இலட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்.


வேப்பனஹள்ளி அடுத்த சிகரப்பள்ளி என்ற இடத்தில் உரிய ஆவணமின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 4 இலட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதனையடுத்து வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் மற்றும் பரிசு பொருட்கள் வாகனங்களில் கொண்டு செல்லப்படுகிறதா என பறக்கும் படையினர் மற்றும் தேர்தல் கண்காணிப்பு குழுவினர்கள் 24 மணிநேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.


இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியை‌அடுத்த சிகரப்பள்ளி கிராமத்தில் செல்லும்  சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 


அப்போது சிகரப்பள்ளி கிராமத்தில் இருந்து சூளகிரி நோக்கி  வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், அதில்  உரிய ஆவணமின்றி ரூ. 4 இலட்சம் பணத்தை கொண்டு சென்றதை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து சூளகிரி தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.


தேர்தல் நடத்த விதிகள் அமலில் இருப்பதாலும், ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணமாக கொண்டு சென்றால் அதற்கான உரிய ஆவணங்கள் இருக்க வேண்டுமென தேர்தல் விதி உள்ள நிலையில் உரிய ஆவணங்கள் இன்றி பணத்தை கொண்டு செல்ல கூடாது என தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad