சூளகிரியில் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக மூட்டை மூட்டையாக கொட்டப்படும் கோழி இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 10 April 2024

சூளகிரியில் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக மூட்டை மூட்டையாக கொட்டப்படும் கோழி இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு.


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் 50 க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் செயல்ப்பட்டு வருகிறது. இந்த இறைச்சி கடைகளில் இருந்து இரவு நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத போது மூட்டை மூட்டையாக கோழி இறைச்சி கழிவுகளை பெங்களூர் -சென்னை சூளகிரியில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக வீசப்படுகிறது.

மூட்டை மூட்டையாக கொட்டப்படும் கோழி இறைச்சி கழிவுகளில் இருந்து துர்நாற்றம் வீசி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் முகம் சுளிக்கும் வண்ணம் ஏற்ப்பட்டு வருகிறது.


இதன் சம்மந்தமாக அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளிடம் கேட்டபோது, சாலையோரமாக இருசக்கர வாகனத்தில் செல்லும் போது முகம் சுளிப்பது போல இந்த பகுதி அமைந்திருக்கிறூஉதொடர்ந்து இந்த சாலையோரமாக தேசிய நெடுஞ்சாலை ஓரமாக கொட்டப்படும் கோழி கழிவுகளால் பல நோய் தொற்று அபாயம் ஏற்பட கூடும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.


மேலும் சுகாதார சீர்கேடு ஏற்ப்படுத்தும் விதமாக கோழி இறைச்சி கழிவுகளை இரவு நேரங்களில் மூட்டை மூட்டையாக கொண்டு வந்து கொட்டப்படும் நபர்கள் மீது ஊராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad