வேப்பனபள்ளி சுற்று வட்டார பகுதிகளில் விவசாயத்திற்கு கடும் தண்ணீர் தட்டுப்பாடு. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 10 April 2024

வேப்பனபள்ளி சுற்று வட்டார பகுதிகளில் விவசாயத்திற்கு கடும் தண்ணீர் தட்டுப்பாடு.


கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பெய்த பருவகனமழை காரணமாக பல ஆண்டுகளாக காய்ந்திருந்த மார்க்கண்டே நதி குப்தாநதி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து ஏரிகளும் குளங்களும் வெள்ளபெருக்கு ஏற்பட்டு நிரம்பி வழிந்தன. இதனால் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2023 வரை இப்பகுதியில் குடிநீருக்கு விவசாயத்திற்கும் தண்ணீர்  போதுமான அளவில் இருந்தது. 

தற்போது ஆண்டுந்தோறும் டிசம்பர் மாதம் வரும் பருவமழையால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பும் என எதிர்பார்த்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பருவ மழை பெய்யததால் மார்கண்டேயன் மற்றும் குப்தா நதிகள் நீரின்றி வற்றியது. இதனால் நீர்வரத்து படிப்படியாக குறைந்து இந்த ஆண்டு அனைத்து ஆறுகள் குளங்களிலும் நீர் நிலைகளிலும் நீரின்றி காய்ந்து காணப்படுகிறது.  இதனால் இந்த வருடம் விவசாயத்திற்கு குடிநீர் கடும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்துள்ள நிலையில் விவசாயத்திற்கு குடிநீருக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  


இந்த நிலையில் வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஜெகநாதபுரம் கிராமத்தில் உள்ள சந்திரசேகர் என்பவரின் விவசாயத் தோட்டத்திற்கு டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு வந்து மாமரங்களுக்கு வினியோகிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பருவமழை இல்லாததால் மாம்பழங்களுக்கு போதுமான நீர் இல்லமால் காய்ந்துள்ள நிலையில் டிராக்டர் மூலம் செடிகளுக்கு விவசாயிகளுக்கு தண்ணீர் ஊற்றி வருகின்றனர். மேலும் இன்னும் இரண்டு மாதங்களில் கடும் வெயில் தாக்கம் இருப்பதால் விவசாயத்திற்கு கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். 


மேலும் தற்போது மார்க்கண்டேயன் நதி மற்றும் குப்தா நதி இரண்டு நதிகளிலும் நீரின்றி காய்ந்து காணப்படுவதால் நிலத்தடி நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Post Top Ad