சூளகிரி அருகே கிராம மக்கள் கருப்பு கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 12 April 2024

சூளகிரி அருகே கிராம மக்கள் கருப்பு கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு.


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த மேலுமலை பஞ்சாயத்து ஓட்டையப்பன் கொட்டாய் என்னும் கிராமம் அமைந்துள்ளது.


இந்த கிராமத்தில் 50 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன, 6 தலைமுறைகளாக இந்த கிராமத்தில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.. கிராமத்திற்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என கிராம மக்கள் ஒவ்வொரு முறையும் வரும் தேர்தலை இந்த கிராம மக்கள் புறக்கணித்து வருகின்றனர்.


மேலும் தேர்தல் புறக்கணிக்கும் போது அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இந்த கிராமத்திற்கு சென்று அடிப்படை வசதிகள் செய்து தருகிறோம் என உறுதி அளித்தாலும் இதுவரை எந்த வேலையும் நடக்கவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.


இந்த நிலையில் ஓட்டையப்பன் கொட்டாய் கிராம மக்கள் கையில் கருப்பு கொடி ஏந்தியும், வீடுகளில் கருப்பு கொடி கட்டியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்., தங்கள் கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என கூறி தற்போது நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வருகின்றனர்.. 


கிராமத்திற்க்கு சாலை , குடிநீர், அங்கன்வாடி மையம் போன்ற அடிப்படை வசதிகள் இன்றியும் மற்றும் அவசர நேரத்தில் ஆம்புலன்ஸ் வர கூட முடியாத நிலையில் கிராம அமைந்துள்ளதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.


தேர்தல் நேரத்தில் வாக்கு கேட்டு வரும் பொழுது கிராம மக்களின் அனைத்து கோரிக்கையும் நிறைவேற்றப்படும் என கூறி வாக்குகளை பெற்று செல்கின்றனர், ஆனால் தற்போது வரை எந்த அரசியல் வாதிகளும், எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.


வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து தங்களது வாக்காளர் அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைப்பதாக கிராம மக்கள் தெரிவித்து வருகின்றனர்...

No comments:

Post a Comment

Post Top Ad