சூளகிரி அருகே இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்; நண்பருடன் கோவிலுக்கு சென்று வீடு திரும்பும் போது சோகம். - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 17 April 2024

சூளகிரி அருகே இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்; நண்பருடன் கோவிலுக்கு சென்று வீடு திரும்பும் போது சோகம்.


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த சப்படி தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மீது மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் பலியானார்..

கர்நாடக மாநிலம் கோரமங்கலம் பகுதியை சேர்ந்த நண்பர்களான காதர் 32, ரன்ஜித் 30 ஆகிய இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே உள்ள தர்காவிற்க்கு சென்று வருவதாக வீட்டில் இருந்து சென்றதாக கூறப்படுகிறது..


கோவிலுக்கு சென்று மீண்டும் இருசக்கர வாகனத்தில் நள்ளிரவு வீடு திரும்பும் போது இப்படி சூளகிரி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சப்படி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது முன்னே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது..


இந்த விபத்தில் காதர் என்ற நபருக்கு தலை முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த இரத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.. உடன் சென்ற இவரது நண்பரான ரன்ஜித் என்பவருக்கு லேசான காயத்துடன் உயிர் தப்பினார்..


தகவலை அறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை விபத்தில் இறந்த காதரின் உடலை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் போலுப் பள்ளி அருகே உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து..இந்த சாலை விபத்து குறித்து சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி விசாரணை நடத்தி வருகின்றனர்..

No comments:

Post a Comment

Post Top Ad