சூளகிரி அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர் கைது. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 9 April 2024

சூளகிரி அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர் கைது.


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த கங்கசந்திரம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் 47 என்பவர் காளிங்கவரம் அருகேயுள்ள கோகுலப் பள்ளி கிராமத்தில் சுமார் 10 லிட்டர் மதிப்பிலான பிளாஸ்டிக் கேனில் பையில் மறைத்து அந்த கிராமத்தின் வழியாக சென்ற போது அவ்வழியே சூளகிரி போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.


அந்த கேன் வைத்திருந்த நபரிடம் சந்தேகத்தின் பேரில் நேரில் சென்று விசாரணை செய்ததில் அந்த நபர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இவரின் பேச்சில் சந்தேகமடைந்த போலீசார் அவர் பையில் வைத்திருந்த பிளாஸ்டிக் கேனை சோதனை செய்ததில் அதில் சுமார் 7 லிட்டரில் கள்ள சாராயம் இருப்பது தெரியவந்தது.


இதனையெடுத்து அந்த நபரை போலீஸ்நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில், அந்த நபர் தனது கிராமத்தகல் தானே  ஊறல் மூலமாக எடுக்கப்பட்ட சாராயத்தை பிளாஸ்டிக் கேன் மூலம் விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.


பின்னர் சட்டவிரோதமாக கள்ள சாராயம் விற்பனைக்கு கொண்டு சென்ற அந்த  நபர் மீது வழக்கு பதிவு செய்த பின் கைது செய்யப்பட்டு  ஓசூர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்

No comments:

Post a Comment

Post Top Ad