இதனை அடுத்து சுல்தான் உடனடியாக காவல் துறைக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் அளித்தார். தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் வருவதற்குள் தீ மளமளவென கட்டிடத்தின்இரண்டாவது தளத்திற்கும் தீ பரவியது. இதனை அடுத்து கிருஷ்ணகிரி, பர்கூர் பகுதியில் இருந்து வந்த 3 தீயணைப்பு வாகனங்களில் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைக்க போராடினர். கட்டிடம் முழுவதும் தீ பரவியதால் உள்ளே செல்ல முடியமால் ஜேசிபி இயந்திரம் மூலம் கட்டத்தின் சுவரை உடைத்து உள்ளே சென்ற தீயணைப்பு வீரார்கள் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தினர்.
இந்த தீ விபத்தில் கடையில் இருந்த சுமார் 25 லட்சம் மதிப்பிலான புத்தாடைகள் அனைத்தும் தீயில் கருகி நாசமானது. இந்த விபத்து சம்மந்தமாக வேப்பனப்பள்ளி போலீசார் விசராணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment