கிருஷ்ணகிரி நீர்தேக்க அணை நிறம்பியதால் 3 மாவட்ட மக்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து, ஆற்றங்கரையோர கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்துதல் தென்பெண்ணை நீர்பிடிப்பு பகுதிகளான கர்நாடகாவின் நந்திமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து கிருஷ்ணகிரி நீர்தேக்க அணை முழுமையாக நிரம்பி வருகிறது, அணையின் முழுக்கொள்ளளவான 52 அடிகளில் தற்போது அணை 51அடிகளை எட்டியதால், அணையின் பாதுகாப்பு கருதி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி அணை நிரம்பியதால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி சரயு அவர்கள் ஆணை பிறப்பித்துள்ளார்.
அணைக்கு விநாடிக்கு 250 கனஅடி நீர் வரத்தாகவும், தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 107 கனஅடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது


No comments:
Post a Comment