சூளகிரி அருகேயுள்ள ஏரிகளுக்கு கடைமடை வரை நீர் வராததால் விவசாயிகள் கவலை. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 8 August 2024

சூளகிரி அருகேயுள்ள ஏரிகளுக்கு கடைமடை வரை நீர் வராததால் விவசாயிகள் கவலை.


ஒசூர் கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து ஒருமாதம் ஆக உள்ளநிலையில், இதுவரை கடைமடை பகுதிக்கு நீர்வராததால் விவசாயிகள் வேதனையடைந்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து இரண்டு பிரதான கால்வாய்கள் மூலம் ஆண்டுதோறும் இரண்டு போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும், இதனால் 8000 ஏக்கர்கள் புன்செய் நிலம் பாசனம் செய்துவந்தநிலையில் கெலவரப்பள்ளி அணையின் மதகுகள் சரிசெய்வதற்காக கடந்தாண்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.

இந்தநிலையில் கடந்தமாதம் 10 ம் தேதி இரண்டு பிரதான கால்வாய்கள் மூலம் பாசனத்திற்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி சரயு தண்ணீர் திறந்து வைத்தார். 120 நாட்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வலதுபுற கால்வாய் மூலம் நீர்பாயும் கடைமடையான சூளகிரியை அடுத்த  நல்லகானக்கொத்தப்பள்ளி, மருதாண்டப்பள்ளி ஆகிய கிராமங்களுக்கு இதுவரை தென்பெண்ணை நீர் சென்றடையவில்லை.


பாசன நீரை எதிர்ப்பார்த்து 500 ஏக்கர்கள் நிலம் உள்ளநிலையில் அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் இதுவரை கடைமடை எட்டாதது விவசாயிகளை வேதனையடைய வைத்துள்ளது, மருதாண்டப்பள்ளி கிராம விளைநிலங்கள் பாசனம் பெற்று உபரிநீர் மருதாண்டப்பள்ளி ஏரி, துரை ஏரிகள் நிறம்பி சூளகிரி அணை முழுக்கொள்ளவை எட்டுவது வழக்கமாக இருந்தநிலையில் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் உயரும் ஆனால், கடை பகுதியை நீர் வரவில்லை என்பதால் ஏரிகளும் நீரின்றி காட்சியளிக்கின்றன.

No comments:

Post a Comment

Post Top Ad