கிருஷ்ணகிரியில் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர் நலச்சங்கத்தின் 2ஆம் ஆண்டு விழா. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 10 September 2025

கிருஷ்ணகிரியில் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர் நலச்சங்கத்தின் 2ஆம் ஆண்டு விழா.


கெலமங்கலம், செப்.10 (ஆவணி 25):

கிருஷ்ணகிரி மாவட்ட சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர் நலச்சங்கத்தின் 2ஆம் ஆண்டு விழா மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று கெலமங்கலத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தராஜ், மோட்டார் வாகன கண்காணிப்பாளர் சங்கர், சிற்றரசு மற்றும் விஜய்க்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். சங்க செயலாளர் திரு. எம். ஆனந்தபாபுவின் தலைமையில் விழா சிறப்பாக நடைபெற்றது.


இந்த விழாவில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் கோவா ஆகிய ஏழு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் பங்கேற்றனர். காலை 8.30 மணி முதல் ஓட்டுனர்கள் நலனுக்காக இலவச கண் பரிசோதனை மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.


நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் ஆனந்தபாபு, முத்துக்குமார், புதுச்சேரி தலைவர் சதீஸ் சங்கர், கர்நாடகா தலைவர் நாகராஜ், ஆந்திர தலைவர் மகேஷ், கேரளா தலைவர் சமசுதீன், தெலுங்கானா தலைவர் சிவாபிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் கிருஷ்ணகிரி, இராயக்கோட்டை, கெலமங்கலம், சூளகிரி மற்றும் ஓசூர் பகுதிகளைச் சேர்ந்த ஓட்டுனர்கள் சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டனர். விழா சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுடன் சிறப்பாக நிறைவு பெற்றது. 

No comments:

Post a Comment

Post Top Ad