கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் நாளை (11.09.2025) மற்றும் 12.09.2025 ஆகிய இரண்டு நாட்கள் வருகை தருகிறார். இந்த வருகையின் போது பல்வேறு தொழில், முதலீடு, மக்கள் நலத்திட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
செப்டம்பர் 11 காலை, முதல்வர் ஓசூரில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டை திறந்து வைக்கிறார். பின்னர் ELCOT IT Park வளாகத்தில் புதிய நிறுவனத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார். அதே நாளில் சூளகிரியில் நடைபெறும் ரோட்ஷோவில் கலந்து கொண்டு, குருபரப்பள்ளியில் ₹2,000 கோடி மதிப்பில் நிறுவப்பட்டுள்ள டெல்டா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையை திறந்து வைக்கிறார். மேலும், ₹1,100 கோடி மதிப்பில் பல புதிய தொழிற்சாலை திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் பங்கேற்கிறார்.
செப்டம்பர் 12 அன்று கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நிகழ்வில், முதல்வர் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். “கல்லில் உறைந்த வரலாறு – கிருஷ்ணகிரியின் தொல்லியல் மற்றும் வரலாற்று சின்னங்கள்” என்ற புத்தகத்தை வெளியிடுகிறார். இதனுடன் மக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு, மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த முக்கியமான நிகழ்வுகளுக்காக முதல்வர் கிருஷ்ணகிரி வருகை தருவதையொட்டி, கெலமங்கலம் கிழக்கு ஒன்றியம், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் செயலாளர் Y. பிரகாஷ், மாவட்ட துணைச் செயலாளர் (முன்னாள் எம்எல்ஏ) பி. முருகன், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் பி.எஸ். சீனிவாசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜி.எம்.சி. சின்னராஜ், உதயநிதி ரசிகர் மன்றம் துணைத் தலைவர் ஜி. சுரேஷ், ஓட்டுநர் அணி துணைத் தலைவர் தல மாதேஷ், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சசிக்குமார், பாலாஜி, இலக்கிய அணி புலி கோவிந்தராஜ், கிளை செயலாளர் முனிராஜ், விவசாயிணி துணை அமைப்பாளர்கள் பூகடை மாரிமுத்து, மெல்ல முனியப்பன், ராஜீவ், சிவக்குமார், ஒடையண்டள்ளி பகுதி உறுப்பினர்கள் ஆகியோர் முதல்வரை நன்றி தெரிவித்து வரவேற்கின்றனர்.
தமிழக முதல்வரின் வருகை – கிருஷ்ணகிரியின் வளர்ச்சிக்கு புதிய மைல்கல்!



No comments:
Post a Comment