தமிழக வெற்றி கழகம் சார்பில் வருகிற நவம்பர் 1, 2025 (சனிக்கிழமை) அன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர், தளி, வேப்பனஹள்ளி, கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, பர்கூர் சட்டமன்றத் தொகுதிகளில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் அவர்கள் நேரில் கலந்து கொண்டு பொதுமக்களை சந்திக்க உள்ளார்.
இதனை முன்னிட்டு, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு தேவையான அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்குமாறு கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பாளர் உயர்திரு தங்கதுரை IPS அவர்களை நேரில் சந்தித்து கழக நிர்வாகிகள் கடிதம் வழங்கினர். இந்த சந்திப்பில் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் தொல்காப்பியன், பிரதீப், பன்னீர்செல்வம், தனபால் ஆகியோர், மத்திய மாவட்ட நிர்வாகிகள் ரோஷன், மகேந்திரன், ரத்னவேல், ஹேமாபிரியா, பயாஸ் ஆகியோர், சூளகிரி ஒன்றிய நிர்வாகிகள் சிவராஜ்பசவராஜ், சபரி, பிரதீப், இளங்கோ, பிரசாந்த், லிங்கா, சந்திரகாந்த், மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதேபோல் காவேரிப்பட்டிணம் ஒன்றிய நிர்வாகிகள் விஜய்குமார், உதயகுமார் வெங்கட், கௌதம், ரியாஸ், மாவட்ட மாணவரணி உறுப்பினர்கள் அருள்குமார், லட்சுமணன், சிவா, ராயக்கோட்டை மூர்த்தி, மணிகண்டன், மாவட்ட மகளிர் அணி உறுப்பினர்கள் இந்திரா, கீதா ஆகியோரும் கலந்து கொண்டனர். வேப்பனப்பள்ளி ஒன்றிய நிர்வாகிகள் நாகராஜன், அம்ரீஷ், கோவிந்தராஜ், ஜெகதீஸ், முருகேசன், உதயகுமார், சக்திவேல், சுரேந்தர், தேன்கனிக்கோட்டை பேரூராட்சி சந்தோஷ், சிவா, மாவட்ட வழக்கறிஞர் அணி சத்யநாராயணன், லோகேஷ், அஸ்வத், தன்னார்வலர் அணி சலீமுல்லாஹ், சையத் சால்மீன், அர்பித், கிழக்கு மாவட்ட நிர்வாகி மணிகண்டன் உள்ளிட்ட ஏராளமான கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
- கிருஷ்ணகிரி செய்தியாளர் சந்திரசேகர்.
No comments:
Post a Comment