கிருஷ்ணகிரி, செப். 17 | புரட்டாசி 01 -
வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி 1987 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு வார சாலை மறியல் போராட்டத்தில் காவல்துறையின் துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதலில் உயிர்நீத்த 21 தியாகிகளின் 38ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மத்திய மாவட்டம் ரவுண்டானா அருகில் வீர வணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் தலைமை வகித்தவர் மு. சோமசுந்தரம். வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் சே. மோகன்ராம், மாவட்ட செயலாளர் சுபா குமார், மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் இளங்கோ, ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பு தலைவர் புல்லட் கணேசன், மாநில துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், சமூக முன்னேற்ற சங்க மண்டல பொறுப்பாளர், ஒன்றிய செயலாளர்கள் ராமன், ரமேஷ் (Ex Army), ராமச்சந்திரன் செவத்தான், ஒன்றிய தலைவர் கணேசன் (Ex Army), ஜெயராமன் (வன்னியர் சங்க மாவட்ட அமைப்பு செயலாளர்), சுரேஷ், மகேந்திரன் (மாவட்ட துணைத் தலைவர்), மணி சங்கம் சத்யராஜ் (மாவட்ட இளைஞர் சங்க துணை செயலாளர்), பெரியண்ணன் (ஒன்றிய செயலாளர்), சண்முகசுந்தரம் (ஒன்றிய இளைஞரணி செயலாளர்), சந்தோஷ் (கிளைத் தலைவர்), அஜித் (ஒன்றிய ஊடகப் பேரவை செயலாளர்) ஆகியோர் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர்.
மேலும் சக்திவேல், அமாசி அரியப்பன், நடராஜ், வேலு, சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்று தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினர்.
.jpg)

No comments:
Post a Comment