கிருஷ்ணகிரி, செப்.10 (ஆவணி 25):
தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி விஜய் அவர்களின் ஆணையின்படி ஏழை, எளிய மக்களுக்காக நல்ல காரியங்களில் ஈடுபட்டு வரும் அமைப்பின் சார்பில், “குருதியுகம் ரத்ததானம்” திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அருள்குமார் அவர்களின் முன்னிலையில், உப்புக்குட்டை பகுதியில் பாம்பு கடித்து பாதிக்கப்பட்டிருந்த திருமதி நாசம்மாள் என்பவருக்கு அவசரமாக ரத்தம் தேவைப்பட்டது. இதனை முன்னிட்டு ஆறுமுகம் அவர்கள் சார்பில் இலவசமாக ரத்தம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வு குறித்து அமைப்பினரால், “எங்கு நன்மை நடந்தாலும் அது நம் பசங்களால்தான் சாத்தியமாகிறது” என்று தெரிவிக்கப்பட்டது. இந்த உதவி, ஏழை மக்களின் உயிர் காக்கும் நோக்கத்துடன் தமிழக வெற்றிக் கழகம் மேற்கொள்ளும் சமூகப்பணிகளில் ஒன்றாகும்.
No comments:
Post a Comment