சூளகிரி, டிச. 19:
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சென்னப்பள்ளி கிராமத்தில் விவசாயி பசவராஜ் என்பவர் ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டு இயக்கம் மற்றும் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் 50 சதவிகித மானியத்தில் ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் பசுமை குடில் அமைத்து, ஜிப் சோபில்லா மலர் (Gypsophila) சாகுபடி செய்து வருகிறார்.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ச. தினேஷ் குமார் அவர்கள் சென்னப்பள்ளி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள பசுமை குடிலுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, நாற்றங்கால் நடவு, மலர் சாகுபடி முறை, விளைச்சல் மற்றும் சந்தைப்படுத்தல், விற்பனை தொடர்பான விவரங்களை விவசாயி பசவராஜிடம் கேட்டறிந்தார். மேலும், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தோட்டக்கலை பயிர்களில் அதிக வருமானம் ஈட்டும் வகையில் விவசாயிகள் செயல்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வின்போது தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் திருமதி குணவதி, உதவி இயக்குனர் ஜெனியர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை – பொ) திரு. சிவநதி உள்ளிட்ட தோட்டக்கலை மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


No comments:
Post a Comment