ஊத்தங்கரை | டிசம்பர் 19
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சென்னப்பநாயக்கனூர் தேசிய நெடுஞ்சாலையில் பூத்தொட்டி ஏற்றி சென்ற பிக்கப் மினிலாரியும், எதிரே வந்த டெம்போ ட்ராவல் வேனும் நேருக்கு நேர் மோதியதில் 7 பேர் காயமடைந்தனர்.
பெங்களூரு ராம்நகர் பகுதியைச் சேர்ந்த ஓம் சக்தி பக்தர்கள் 10-க்கும் மேற்பட்டோர் மருவத்தூர் கோயிலுக்கு சென்று, வெள்ளிக்கிழமை மதியம் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது சென்னப்பநாயக்கனூர் பகுதியில், பெங்களூருவில் இருந்து பூத்தொட்டிகளை ஏற்றிக்கொண்டு திண்டிவனம் நோக்கி சென்ற பிக்கப் மினிலாரி, முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்ற போது, எதிரே வந்த டெம்போ ட்ராவல் வேனுடன் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் டெம்போ ட்ராவல் வேனில் பயணம் செய்த 10 பேரில் 7 பேர் லேசான காயமடைந்தனர். விபத்தை பார்த்த அருகிலிருந்த பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் தனலட்சுமி (65) என்பவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விபத்து தொடர்பாக ஊத்தங்கரை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


No comments:
Post a Comment