ஊத்தங்கரை அருகே நேருக்கு நேர் கார் விபத்து எட்டு பேர் படுகாயம்; அரசு மருத்துவமனையில் சிகிச்சை. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 20 December 2025

ஊத்தங்கரை அருகே நேருக்கு நேர் கார் விபத்து எட்டு பேர் படுகாயம்; அரசு மருத்துவமனையில் சிகிச்சை.


ஊத்தங்கரை, டிசம்பர் 21:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பாப்பனூர் கூட்ரோடு பகுதியில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் எட்டு பேர் படுகாயமடைந்தனர். கிருஷ்ணகிரியில் இருந்து மேல்மருவத்தூர் நோக்கி சென்ற காரில், பெங்களூரு தாவரக்கரையைச் சேர்ந்த நிக்கில் குமார் (26), கீதா (40), ரேகா சிங் (42), லட்சுமி (69) ஆகிய நான்கு பேர் பயணித்துக் கொண்டிருந்தனர். இதேபோல், கும்பகோணத்தில் இருந்து சுற்றுலா முடித்து பெங்களூரு நோக்கி சென்ற மற்றொரு காரில், பெங்களூரு கஸ்பா பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் (50), உஜ்பல் (35), ஹர்ஷிதா (33), விஜயலட்சுமி (40) ஆகிய நான்கு பேர் பயணித்தனர்.


நேற்று காலை 10.50 மணியளவில் கிருஷ்ணகிரி மெயின் ரோடு, பாப்பனூர் பகுதியில் இரண்டு கார்களும் நேருக்கு நேர் மோதியதில், இரு கார்களிலும் பயணித்த எட்டு பேரும் படுகாயமடைந்தனர். தகவலறிந்ததும் 108 ஆம்புலன்ஸ் மூலம் அனைவரும் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த ராஜலட்சுமி (ஊத்தங்கரை தாசில்தார்) பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து, விபத்து தொடர்பாக கேட்டறிந்து ஆறுதல் கூறினார். இதுகுறித்து ஊத்தங்கரை காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

No comments:

Post a Comment

Post Top Ad