ஊத்தங்கரை, டிச. 19:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் செயல்பட்டு வரும் அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பெரியசாமி மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ராதிகா ஆகியோர் தலைமையேற்றனர். சிறப்பு அழைப்பாளராக திமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் கலந்துகொண்டு, 800 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய எம்எல்ஏ மதியழகன், தமிழக அரசு கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், மாணவர்கள் கல்வி பயில எளிதான போக்குவரத்து வசதியை உறுதி செய்யும் நோக்கில் விலையில்லா மிதிவண்டி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த மிதிவண்டிகள் மாணவர்களின் கல்வி பயணத்தை மேலும் எளிதாக்கும் என அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் கதிரவன், ஊத்தங்கரை பேரூராட்சி தலைவர் அமானுல்லா, பள்ளி பெற்றோர்–ஆசிரியர் கழக தலைவர் தேவராஜ், ஒன்றிய செயலாளர்கள் மத்தியம் எக்கூர் செல்வம், வடக்கு குமரேசன், தெற்கு ரஜினி செல்வம், நகர செயலாளர் பார்த்திபன், பேரூராட்சி துணைத் தலைவர் கலைமகள் தீபக், மாவட்ட பொறியாளர் அணி காந்தி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சின்னத்தாய் உள்ளிட்ட ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
@ தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662



No comments:
Post a Comment