தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா: கிருஷ்ணகிரியில் கலை நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு பேரணி, மருத்துவ முகாம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 23 January 2026

தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா: கிருஷ்ணகிரியில் கலை நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு பேரணி, மருத்துவ முகாம் நடைபெற்றது.


கிருஷ்ணகிரி, ஜன. 23:


தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை சார்பில் கிருஷ்ணகிரி நகரில் கலை நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு பேரணி மற்றும் மருத்துவ முகாம் ஆகியவை இணைந்த சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை தொடங்கி வைத்தார்.


இந்த நிகழ்வில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கர், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராமசந்திரன், சமூக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கம் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் சந்திரமோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியின் போது, சாலை விபத்துகளைத் தடுப்பதற்கான பாதுகாப்பு விதிகள், தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் பயன்பாடு, வேகக்கட்டுப்பாடு, மதுபானம் அருந்தி வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து பொதுமக்களிடம் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பேரணியின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் மருத்துவ முகாமும் நடத்தப்பட்டு சுகாதார ஆலோசனைகள் வழங்கப்பட்டன.


சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிப்பதன் மூலம் விபத்துகளை குறைத்து, உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும் என காவல் துறை சார்பில் வலியுறுத்தப்பட்டது. 

No comments:

Post a Comment

Post Top Ad