சாலை பாதுகாப்பு வாரம்: ஊத்தங்கரையில் நாடகக்கலைஞர்களுடன் காவல்துறை விழிப்புணர்வு பேரணி. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 23 January 2026

சாலை பாதுகாப்பு வாரம்: ஊத்தங்கரையில் நாடகக்கலைஞர்களுடன் காவல்துறை விழிப்புணர்வு பேரணி.


ஊத்தங்கரை, ஜன. 22:


சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலையத்தின் சார்பில், நாடகக்கலைஞர்களை இணைத்து பொதுமக்களுக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


இந்த பேரணி, கல்லாவி சாலை ரவுண்டானா, நான்கு ரோடு, எல்ஐசி அலுவலகம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக நகர்ந்து சென்றது. பேரணியின் போது, எமதர்மர் மற்றும் சித்திரகுப்தர் வேடம் அணிந்த நாடகக்கலைஞர்கள், சாலையில் பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் குறித்து நாடக வடிவில் விளக்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். போக்குவரத்து விதிகளை மீறுவதால் ஏற்படும் விளைவுகள், தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம், வேகக்கட்டுப்பாடு போன்ற அம்சங்கள் நாடகத்தின் மூலம் எடுத்துரைக்கப்பட்டன.


இந்த விழிப்புணர்வு பேரணியை முருகன், ஊத்தங்கரை காவல் ஆய்வாளர், கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்வில் காவல் உதவி ஆய்வாளர் மோகன், காவலர்கள், ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பொதுமக்கள் சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து விபத்துகளைத் தவிர்க்க வேண்டும் என்பதே இந்த விழிப்புணர்வு நடவடிக்கையின் நோக்கம் என காவல்துறை தெரிவித்தது. 

No comments:

Post a Comment

Post Top Ad