தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 3 February 2026

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கிருஷ்ணகிரி, பிப். 03:


தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில், கரூர் மாவட்டத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் அவர்களின் ஆணைக்கிணங்க நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் கு. பழனி தலைமை வகித்தார். இதில் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் எம்.ஆர். கஜேந்திரன், மாவட்ட பொருளாளர் கணேசன், மாவட்ட செய்தி தொடர்பாளர் மணிகண்டன், மாவட்ட துணைத் தலைவர் மாதேஸ்வரன், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் சரவணன், சந்திரமோகன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.


மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் அரிப்புத்திரன், நந்தகுமார், அருண், பசவராஜ், முத்துலிங்கம், மேகராஜன், ரமேஷ், திம்மராஜ், பர்கூர் ராஜா, மகி (எ) மகேந்திரன், ஞானசேகரன் உள்ளிட்ட சுமார் 40-க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு கண்டனங்களை பதிவு செய்தனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தில்,

  • பத்திரிகையாளர்களை தாக்கிய குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்,

  • பத்திரிகையாளர்களுக்கு பணி பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும்,

  • பத்திரிகையாளர் பாதுகாப்பு குறித்த தனிச்சட்டம் உடனடியாக இயற்ற வேண்டும்,

  • பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்

என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 

No comments:

Post a Comment

Post Top Ad