கிருஷ்ணகிரி – பிப்ரவரி 06
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கல்லாவி பகுதியில், தமிழக அரசின் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படியும், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ் குமார் அவர்களின் உத்தரவின்பேரிலும், மாவட்ட சுகாதார அலுவலர் ரமேஷ் குமார் அவர்களின் வழிகாட்டுதலுடன் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஊத்தங்கரை அடுத்த கல்லாவி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில், பொதுமக்களுக்கு 17 வகையான சிறப்பு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன.
முகாமில்:
-
ரத்தப் பரிசோதனை
-
கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஸ்கேன் பரிசோதனை
-
எக்ஸ்ரே, ECG, எக்கோ, அல்ட்ரா சவுண்ட்
-
கண் பரிசோதனை
-
மகப்பேறு மருத்துவம் உள்ளிட்டபல துறை மருத்துவ நிபுணர்களால் முழுமையான சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர்கள் ரஜினி செல்வம், மூன்றம்பட்டி குமரேசன், மாவட்ட பொருளாளர் கதிரவன், வட்டார மருத்துவ அலுவலர் தமிழரசி, ஊத்தங்கரை அரசு மருத்துவ அலுவலர் அபிராமி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவசண்முகவேல் உள்ளிட்ட மருத்துவ அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு பயனடைந்தனர்.

.jpg)

No comments:
Post a Comment